Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடிகர் திலீப் ஜாமீன் கேட்டு எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்..!

திலீப்

மலையாள நடிகை கடத்தல் வழக்கில் பல்சர் சுனி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், நேற்று காலை ஆலுவா போலீஸ் திலீப்பிடம் நடத்திய 12 மணி நேர தீவிர விசாரணைக்குப் பின் மாலை 6.20 மணிக்கு திலீப்பை கைது செய்தனர். அதன் பின்னும் போலீஸார் விடிய விடிய விசாரணை நடத்தினார்கள். அப்போது, முக்கியத் தகவல்கள் போலீஸாரிடம் திலீப் சொல்லி உள்ளார். அதனைத் தொடர்ந்து இன்று காலை சுமார்  6.20 மணி அளவில் பலத்த போலீஸ் பாதுகாப்போடு திலீப்பை அங்கமாலி மாஜிஸ்திரேட் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர் போலீஸார். பிறகு திலீப்பை 14  நாள்கள் சிறை காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அப்போது ஜெயிலில் தனக்குத் தனியறை வேண்டும் எனத் திலீப் கேட்டதை ஏற்க மாஜிஸ்திரேட் மறுத்துள்ளார். மீண்டும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆலுவா கிளை ஜெயிலில் திலீப் அடைக்கப்பட்டார். திலீப் அப்போது தனது குடும்பத்தினரைப் பார்க்க வேண்டும் என்று  ஆசைப்பட்டதைப் போலீஸார் மறுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து திலீப் ஜாமீன் கேட்டு எர்ணாகுளம் கோர்டில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close