Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெங்களூவில் காவ்யா மாதவன் தலைமறைவு? கைதுசெய்ய போலீஸ் தீவிரம்!

திலீப், காவ்யா மாதவன்

மலையாள நடிகை கடத்தல் சம்பவமாக நடிகர் திலீப்பை கேரளா போலீஸார் கைது செய்துள்ள நிலையில், இந்த கடத்தலில் நடிகை காவ்யா மாதவனுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகம் அடைந்துள்ளனர். அதற்கான ஆதாரங்களும் போலீஸிடம் சிக்கியுள்ளன. காவ்யா மாதவனை விசாரிக்க முயன்றபோது, அவரும் அவரது தாயார் சியாமளாவும் கடந்த ஒருவாரமாக  தலைமறைவானது தெரியவந்தது. அவர்களது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

கடந்த சில நாள்களுக்கு முன், கேரள மாநிலத்தில் உள்ள கொடுங்கல்லூர் கோயிலுக்கு நடிகர் திலீப் மற்றும் காவ்யா மாதவன் ரகசியமாக சாமி கும்பிடச் சென்றனர். அதன்பின்தான், காவ்யா மாதவன் தலைமறைவாகியுள்ளார். நடிகை கடத்தல் வழக்கில் நடிகை காவ்யா மாதவனை விசாரித்தால், பல உண்மைகள் தெரியவரலாம். திலீப்புக்கு காவ்யா மாதவன் எங்கு இருக்கிறார் என்று தெரியும். அவரை போலீஸ் காவலில் எடுக்க  காவல்துறை தீர்மானித்துள்ளது. காவ்யா மாதவனும் அவரது தாயாரும் பெங்களூருவில் இருக்கலாம் என்கிற தகவல் போலீஸாருக்குக் கிடைத்துள்ளது. தற்போது, காவ்யா மாதவனைக் கைதுசெய்ய போலீஸார் தீவிரமாக உள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement