ஜிஎஸ்டி-யால் வாகனப்பதிவு முடக்கம்!

ஜிஎஸ்டி வரிவிதிப்புக் காரணமாக ஆர்.டி.ஓ அலுவலகங்களில் புதிய வாகனங்களைப் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்களைப் பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். 

gst
 

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்புக் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் ஜிஎஸ்டி வரிவிதிப்பால் பல்வேறு பிரச்னைகளை மக்களும் வணிகர்களும் சந்தித்துவருகின்றனர். ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிராக எதிர்க்கட்சியினர் குரல்கொடுத்து வருகின்றனர். ஜிஎஸ்டி வரிவிதிப்புக் காரணமாகத் தமிழகத்தில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகங்களில் வாகனங்களைப் பதிவு செய்ய முடியவில்லை.

 இதுகுறித்து ஆர்.டி.ஓ அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், "ஜிஎஸ்டி-யால் புதிய வாகனங்களைப் பதிவு செய்ய முடியவில்லை. இதற்கு, தற்போதுள்ள சாஃப்ட்வேரில் ஜிஎஸ்டி வரி சம்பந்தமான விவரங்களைப் பதிவேற்ற வேண்டும். இதற்கான பணிகள் ஆர்.டி.ஓ. அலுவலக சாஃப்ட்வேரில் நடந்துவருகிறது. இதன்காரணமாகப் புதிய வாகனங்களைப் பதிவு செய்ய முடியவில்லை. இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களுக்குள் இந்தப் பிரச்னை சரியாகிவிடும். ஜூலை மாதத்துக்குள் முன்பு விற்பனை செய்யப்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன" என்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!