Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பான் கார்டு, ஆதார் எண்ணுடன் இணைக்க... `ஆயகர் சேது’ 

பான் கார்டை, ஆதார் எண்ணுடன் இணைக்கவும் வரி செலுத்துவோரின் வசதிக்காகவும் வருமான வரி தொடர்பான அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிய `ஆயகர் சேது’ (Aayakar Setu) எனும் மொபைல் அப்ளிக்கேஷனை வருமானவரித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. 

 

ஆதார்ஆதார்ஆதார்

ஆதார்ஆதார்


இந்த `ஆயகர் சேது’ மொபைல் அப்ளிக்கேஷன் மூலம், வாடிக்கையாளர்கள் பான் கார்டு எண்னை, எளிதாக ஆதார் எண்ணுடன் இணைக்கும் வகையில் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. கூகுள் ப்ளே ஸ்டோரில் `ஆயகர் சேது’ மொபைல் அப்ளிக்கேஷனை பதிவிறக்கம் செய்து எளிதாகவும் உடனடியாகவும் இணைக்கலாம். இந்த மொபைல் அப்ளிக்கேஷனில் பான் கார்டு விண்ணப்பித்தல், வரி செலுத்துதல், வருமான வரியைக் கணக்கிடுதல் போன்றவற்றைச் செய்யலாம். வரியைக் கணக்கிடுவது மட்டுமில்லாமல் வரி தொடர்பான பல்வேறு விஷயங்களும் இந்த மொபைல் அப்ளிகேஷனில் அடங்கியிருக்கிறது. வருமான வரி குறித்த எந்த ஒரு சந்தேகம் இருந்தாலும் உங்களுக்குப் பதிலளிக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி வரி தொடர்பான விளையாட்டும் இந்த `ஆயகர் சேது’ மொபைல் அப்ளிகேஷனில் இணைக்கப்பட்டுள்ளது. `7306525252' என்ற எண்ணுக்கு அழைப்பு அல்லது மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் உங்களது மொபைலுக்கு `ஆயகர் சேது’ அப்ளிகேஷனை எளிதாகப் பதிவேற்றம் செய்து பயன்படுத்தவும் முடியும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement