வெளியிடப்பட்ட நேரம்: 16:51 (14/07/2017)

கடைசி தொடர்பு:16:53 (14/07/2017)

அதிரவைக்கும் ஐடியா-வின் புதிய ஆஃபர்!

ரிலையன்ஸ் ஜியோவுக்குப் போட்டியாக அனைத்துத் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அதிரடி ஆஃபர்களை தொடர்ச்சியாக அறிவித்து வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது ஐடியா நிறுவனமும் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

ஐடியா

இலவசச் சலுகைகளால் இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில், அதிரடி மாற்றத்தையே ஏற்படுத்தியிருக்கிறது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். இலவச 4G டேட்டா மற்றும் இலவசக் கால்கள் மூலம், 12 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைச் சில மாதங்களிலேயே அந்நிறுவனம் பெற்றது. இதுவரை ஜியோ நிறுவனம் வழங்கிய இலவசச் சலுகைகள் விரைவில் முடியவிருக்கின்றன. இதையடுத்து, ஜியோ அடுத்தடுத்து ஆஃபர்களை அள்ளித் தெளிக்கும் முன்னர் மற்ற நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிரடித் திட்டங்களை அறிவித்து வருகின்றனர்,

தற்போது, ஐடியா மொபைல் வாடிக்கையாளர்கள், ரூ.453-க்கு ரீசார்ஜ் செய்து 84 ஜிபி இன்டர்நெட் டேட்டா பெற்றுக்கொள்ளலாம். மேலும் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா வீதம் இந்த ஆஃபர் வழங்கப்பட உள்ளது. இதில் ஒரு நாளைக்கு 300 நிமிடங்கள் என வாரத்துக்கு 1,200 நிமிடங்கள் இலவசமாக அழைப்புகள் மேற்கொள்ளலாம் என ஐடியா நிறுவனம் அறிவித்துள்ளது.