Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எந்த இடங்களில் இந்தியர்களுக்கு அனுமதி இல்லை தெரியுமா?

ல ஏரியா தாதாக்களின் பிரசித்திபெற்ற வசனம் `இது எங்க ஏரியா உள்ளே வராதே'. தெருவுக்குத் தெரு, ஏரியாவுக்கு ஏரியா வம்புச்சண்டைகளும் வாய்க்கால் தகராறுகளும் எப்போதும் காலம் காலமாக இருந்துவருபவை. சிறு வயது முதல் முதிர் வயது வரை பக்கத்து ஏரியாவோடு அட்ராசிட்டி செய்து ஆடி அடங்கியவர்கள் பலர். ஒவ்வொருவருக்கும் தாங்கள் வாழும் பகுதியின் மீதும், ஊர் மீதும், மாநிலத்தின் மீதும், நாட்டின் மீதும் இப்படியான பிணைப்புகள் ஏற்படுவதற்கு இனம், மொழி, மதம் சார்ந்த கலாசார உறவுகள் மிக முக்கியக் காரணங்களாக விளங்குகின்றன. இவ்வாறான பிணைப்புகள் அரசியல், ஆட்சி, அதிகாரம் என வரும்போது, மக்கள் மத்தியில் உறவுரீதியாகப் பல தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

இங்கு இந்திய நாட்டில் இந்தியர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நான்கு இடங்களைப் பற்றிக் காணலாம்.

யூனோ-இன் ஹோட்டல் (Uno-in hotel)

இந்தியர்

பெங்களூரில் 2012-ம் ஆண்டில் யூனோ-இன் ஹோட்டல் ஜப்பானிய மக்களுக்காகப் பிரத்யேகமாக நிறுவப்பட்டது. நகரில் ஜப்பானியர்களின் வருகை அதிகரித்துவந்ததால், ஜப்பானியர்களின் உணவுத் தேவைகளைப் பூர்த்திசெய்ய, நிப்பான் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தால் இந்த உணவகம் தொடங்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து நடந்த பல சம்பவங்களால் `உணவகத்துக்குள் ஜப்பானியர்களுக்கு மட்டுமே அனுமதி, இந்தியர்களுக்கு அனுமதி இல்லை' என ஹோட்டல் நிர்வாகம் அறிவித்தது. இதனால், கடந்த 2014-ம் ஆண்டு தொடக்கத்தில் இனபாகுபாடு குற்றச்சாட்டு காரணமாக எதிர்ப்பு எழுந்ததால், யூனோ-இன் மூடப்பட்டது.

Free Kasol Cafe, Kasol :

இடம்

இமாச்சலப் பிரதேசத்தின் கசோல் பகுதியில், `ஃப்ரீ கசோல்' மிகவும் புகழ்பெற்ற காபி ஷாப். இது அமைந்துள்ள இடம் `மினி இஸ்ரேல்' என்று அழைக்கப்படுகிறது. இஸ்ரேல் உணவும் துருக்கி காபியும் இங்கு மிகப் பிரபலம். இஸ்ரேலியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் இந்தப் பகுதியில், கடந்த 2015-ம் ஆண்டில் இந்தியப் பெண் ஒருவர், தன் பிரித்தானிய நண்பருடன் கசோல் கஃபேக்குச் சென்றதாகவும், அப்போது கடை உரிமையாளர் இந்தியப் பெண்ணுக்குச் சேவை வழங்க மறுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. `இஸ்ரேலியர்களை வரவேற்கும்போது ஓர் இந்தியப் பெண்ணுக்கு ஏன் சேவை மறுக்கப்பட்டது?' எனப் பலரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கசோல் கஃபே, `அப்படியான பாகுபாடு பார்க்கப்படவில்லை' என விளக்கம் அளித்தது.

கோவா கடற்கரைகள்:

இடம்

இந்தியாவின் மிகச்சிறிய பரப்பளவுகொண்ட கோவா மாநிலத்தில், கோவா கடற்கரைகள் பலருக்கு மிகவும் உற்சாகத்தைத் தரக்கூடியவை. குறிப்பாக, கோவாவில் சில கடற்கரைப் பகுதிகளில் வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. கடற்கரைகளை நிர்வகிக்கும் ஷேக்குகளும் உணவக உரிமையாளர்களும் வெளிப்படையாகவே `இந்தியர்களுக்கு அனுமதி இல்லை' என்கின்றனர். வெளிநாட்டவர்கள் நீச்சல் உடைகளை அணிந்துகொண்டிருப்பதால் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கவே இப்படியான கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவதாகக் கூறுகின்றனர். கோவா போலவே புதுச்சேரியிலும் வெளிநாட்டவர்களை மட்டும் அனுமதிக்கும் கடற்கரைப் பகுதிகள் இருப்பதை, பலரும் அறிவர்.

இடம்

பொதுவாக இந்தியர்கள் படிப்புக்காகவும், தொழில் சார்ந்தும், சுற்றுலா பயணத்துக்காகவும் உலக நாடுகள் முழுவதும் பயணம் செய்தாலும், இந்தியர்கள் நிரந்தர வாழ்விடமாகக் கொள்ளாத நாடுகளும் உள்ளன. இந்திய அரசின் வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சகத்தின் பதிவுகளின்படி, உலகில் வட கொரியா, பாகிஸ்தான், பூட்டான் உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு மட்டும் எந்த இந்தியர்களும் புலம்பெயரவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பூட்டான் அரசு, பூட்டானியர்கள் மட்டுமே அந்நாட்டில் நிரந்தரமாக வாழ அனுமதி வழங்குகிறது. பாகிஸ்தானில் வாழ்வதற்கு இந்தியர்களுக்கு நீண்டகால அனுமதி வழங்கப்படுவதில்லை. ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகளை மிரட்டி வருகிறது வட கொரியா. கிட்டத்தட்ட வட கொரியா தனி உலகத்தில் வாழ்கிறது. இந்த மூன்று நாடுகளிலும் இந்தியர்கள் நிரந்தரமாக வசிப்பதில்லை. ஒவ்வொரு நாட்டுக்கும் இடையே நீடித்துவரும் அயல்நாட்டு கொள்கைகள்,  வெளியுறவு ஒப்பந்தங்கள், குறிப்பாக நீண்டகால விசா பெறுவது, குடியுரிமை பெறுவது போன்றவற்றில் பின்பற்றப்படும் கொள்கைகள், சட்டதிட்டங்கள் இவற்றுக்கு மிகமுக்கியக் காரணங்களாக இருந்துவருகின்றன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close