Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரசு என்னை தனிமைப்படுத்துகிறது..! சசிகலா விவகாரத்தை எழுப்பிய டி.ஐ.ஜி ரூபா வேதனை..!

அரசு என்னைத் தனிமைப்படுத்துகிறது என்று சசிகலா சிறை விவகாரம் குறித்து புகார் எழுப்பிய கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா தெரிவித்துள்ளார். 


பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதற்காக 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா உயர்அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பினார். இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று, 'ஊடகங்களில் தொடர்ச்சியாக ரூபா குற்றம்சாட்டுவது விதிமுறைகளுக்கு எதிரானது' என்று சித்தராமையா தெரிவித்தார். இதுகுறித்து தெரிவித்த டி.ஐ.ஜி ரூபா, 'சசிகலா தொடர்பான விவகாரத்தில் அரசு  காரணமில்லாமல் என்னைத் தனிமைப்படுத்துகிறது. சசிகலா விவகாரம் தொடர்பான அறிக்கையை நான் ஊடகங்கள் மத்தியில் வெளியிடவில்லை. நான் சிறைத்துறை தலைவர் சத்தியநாரயண ராவ்விடம் தான் அளித்தேன். அவர்தான் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார். என்னை ஊடகங்களில் பேசக் கூடாது என்று உத்தரவிட்டால், அனைத்து அதிகாரிகளுக்கும் அதேபோல உத்தரவிடவேண்டும்' என்று தெரிவித்துள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close