Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தொடர்ந்து கனமழை; மிதக்கும் குஜராத்- பாதிப்பில் மக்கள்

குஜராத்தில் பெய்துவரும் கனமழையால் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

குஜராத்தில் கனமழை

வட இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் குஜராத், மும்பை, சூரத், அகமதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. குஜராத் மாநிலத்தில் மர்பி மாவட்டத்தில் தங்கரா பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதுமட்டுமன்றி அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு தடுப்பணைகள் நிரம்பியதால், ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. தேசிய பேரிடர் மீட்புக் குழு வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்து வருகின்றனர்.

மேக வெடிப்பின் காரணமாகக் கனமழை மேலும் இரண்டு நாள்களுக்கு இப்பகுதிகளில் தொடரும் என எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குஜராத்தில் ஒரு மாவட்டமே வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. இதனால், தங்கரா பகுதியிலிருந்து மட்டும் சுமார் 1,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படையினர் மீட்புப் பணிகளைத் துரிதமாகச் செய்து வருகின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close