வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (15/07/2017)

கடைசி தொடர்பு:16:20 (15/07/2017)

அதிகரிக்கும் குற்ற வழக்குகள்: திணறும் டெல்லி போலீஸ்!

தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் குற்ற வழக்குகள் அதிகரித்து வருவதால், மாநகரப் போலீஸார் குற்றங்களைத் தடுத்துக் குறைக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

டெல்லி

இந்தியத் தலைநகர் டெல்லி மாநகரில் திருட்டு, கொலை எனக் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை இந்தாண்டு பல மடங்கு அதிகரித்துள்ளது மாநகரப் போலீஸாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. 2017-ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பல ஆயிரம் வழக்குகள் பதிவாகியுள்ளன. சமீபத்தில் டெல்லி போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், 2016-ம் ஆண்டைவிட 2017-ம் ஆண்டு குற்ற வழக்குகள் 21 சதவிகிதம் உயர்ந்து சுமார் 20,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தக் குற்ற வழக்குகளில் அதிகப்படியாக வாகன திருட்டு, வழிப்பறி, வீடு புகுந்து திருட்டு எனத் திருட்டுச் சம்பவங்களே பதிவாகியுள்ளன. இதுகுறித்து டெல்லி போலீஸ் வட்டாரத்தினர் கூறுகையில், ‘கொலை போன்ற கொடூர சம்பவங்கள் குறைந்திருந்தபோதும் பிற குற்ற சம்பவங்கள் அதிகளவிலேயே நடந்துகொண்டிருக்கின்றன. பணத்தைக் குறிவைத்து நடக்கும் குற்றச் சம்பவங்களே போலீஸாருக்கு கடும் சவலாக உள்ளன’ என்று தெரிவித்தனர்.