Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபடாமல் காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்கமுடியாது..! - முதல்வர் மெஹ்பூபா முப்தி

அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபடாமல் காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்க முடியாது என்று அம்மாநில முதல்வர் மெஹ்பூபா முப்தி தெரிவித்துள்ளார்.  

காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக அமைதியற்ற சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், காஷ்மீர் மாநில முதல்வர் மெஹ்பூபா முப்தி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அவர்கள் இருவரும் காஷ்மீரில் நிலவும் அமைதியற்ற  சூழல் குறித்து விவாதித்துள்ளனர். அதன்பிறகு செய்தியாளர்களிடம் மெஹ்பூபா முப்தி, 'காஷ்மீரில் பிரச்னை குறித்த விவகாரத்தில் ஒற்றுமையை வெளிக்காட்டியதற்காக, நான் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

காஷ்மீரில் ஏற்படும் பிரச்னைகளுக்குப் பின்னால் வெளிநாட்டுச் சதி இருந்து வருகிறது. அவர்கள் வகுப்புவாதத்தின் அடிப்படையில் இந்தியாவைப் பிளவுபடுத்த முயற்சி செய்கிறார்கள். எனவே அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் காஷ்மீர் விவகாரத்தில் எங்களால் வெற்றி பெற முடியாது' என்று தெரிவித்தார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement