Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் தடைச்சட்டம்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் தடைச் சட்டம் குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

துப்புரவுப் பணியாளர்கள்

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் பணி மத்திய அரசால் கடந்த 2013-ம் ஆண்டு தடை செய்யப்பட்டது. ஆனால், இத்தடை சட்டமாக இயற்றப்பட்டாலும், இன்னும் பல இடங்களில் இச்சட்டம் முழுமையாகப் பின்பற்றப்படவில்லை. எனவே இச்சட்டம் தீவிரமாகப் பின்பற்றப்பட உத்தரவிட வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு மத்திய, மாநில அரசுகளுக்கு புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவில், ’மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் தடைச் சட்டம் நடைமுறையில் இருக்கும் நிலையிலும், இச்சட்டத்தை இன்னும் பலர் பின்பற்றவில்லை எனக் கூறப்படுகிறது. மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவது என்பது முற்றிலும் மனித உரிமை மீறல். மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் தடைச் சட்டம் முழுமையாக, தீவிரமாக அமல்படுத்தப்பட வேண்டும். இதுகுறித்து இன்னும் இரண்டு வார காலங்களில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்’ எனக் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement