Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாளை இந்தியக் குடியரசுத்தலைவருக்கான தேர்தல்!

ஜூலை மாதத்துடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து, குடியரசுத் தலைவர் தேர்தல் நாளை ஜூலை 17-ம் தேதி நடைபெறவுள்ளது.

ராஷ்டிரபதி பவன்

நாட்டின் அடுத்தக் குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் ஆளும் பா.ஜ,க சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி சார்பில் மீராகுமார் போட்டியிடுகிறார். தமிழகத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்காக டெல்லியில் இருந்து வந்திருந்த தேர்தல் மேற்பார்வையாளர்கள் நேற்று மாலை தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

இந்த 15-வது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் வாக்குப்பதிவு, தமிழகத்தில், சென்னை-600 009, புனித ஜார்ஜ் கோட்டை, சட்டமன்றப் பேரவைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள 'குழுக் கூட்ட அறை' -யில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இந்தத் தேர்தலை நடத்த, இந்தியத் தேர்தல் ஆணையத்தால் சட்டமன்றப் பேரவைச் செயலாளர் (பொ) க. பூபதி, சட்டமன்றப் பேரவைச் செயலக இணைச் செயலாளர் பா.சுப்பிரமணியம் ஆகியோர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement