Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ரயில் பயணம்: கங்குலி நெகிழ்ச்சி!

மேற்கு வங்காளத்தில் தன் சிலை திறப்பு விழாவிற்காக 15 ஆண்டுகளுக்குப் பின்னர் கிரிக்கெட் வீரர் கங்குலி ரயிலில் பயணம் செய்திருக்கிறார்.

கங்குலி

இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டன் என்பதையும் தாண்டி, இந்திய அணியின் காட்ஃபாதராய் விளங்கியவர் கங்குலி. ஓய்வுபெற்று பல ஆண்டுகளாகியும், இந்தியாவில் கிரிக்கெட் மட்டைகள் சுழலும் இடங்களிலெல்லாம் ‘தாதா என்ற கோஷம் இன்னும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. கிரிக்கெட்டின் மெக்கா எனப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் தான் கங்குலியின் டெஸ்ட் பயணம் தொடங்கியது. பலம் வாய்ந்த இங்கிலாந்து பந்துவீச்சை எதிர்கொண்ட சவுரவ், அறிமுக போட்டியிலேயே 131 ரன்கள் குவித்து அசத்தினார்.

தொடர்ந்து தனது அதிரடி ஆட்டங்களால் கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக உருவானார். 2003-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் டெஸ்ட் சதம் அடித்தபோது கங்குலி பேட்டை உயர்த்தியபடி வந்தார். இந்நிகழ்வை உணர்த்தும் வகையில் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பலூர்காட் என்ற பகுதியில் கங்குலிக்கு சிலை திறக்கப்பட்டது. இந்த சிலை திறப்பு விழாவில் கங்குலி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அசத்தினார். அந்த விழா மேடையில் கங்குலி பேசுகையில், ’2001-ம் ஆண்டு ரயிலில் பயணித்தேன். அதன் பிறகு 15 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த விழாவுக்காக மீண்டும் ரயிலில் பயணம் செய்து வந்துள்ளேன்’ என நெகிழ்ச்சியாகக் கூறினார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement