Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பீகார் மெகா கூட்டணியை உடைக்கும் சி.பி.ஐ எனும் காரணி!


"எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் பி.ஜே.பி கால் ஊன்றலாம். ஆனால், பீகார் மாநிலத்தில் அந்த கட்சியை கால் ஊன்ற விடமாட்டோம்" என்ற சபதத்துடன் பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சேர்ந்து 2015-ம் ஆண்டு மெகாக் கூட்டணி அமைத்தன. எதிர் கட்சி வரிசையில் பி.ஜே.பி மட்டுமே இருந்த து.

பிளவை ஏற்படுத்த திட்டம்

நிதிஷ்குமார் தலைமையிலான மெகா கூட்டணிதான் வெற்றி பெற்றது. நிதிஷ்குமார் முதல்வராகப் பொறுப்பேற்றார். மத்திய அரசில் மட்டும் இருந்தால் போதாது. அனைத்து மாநிலங்களிலும் பி.ஜே.பி ஆட்சி அமைய வேண்டும் என்பதில் பிரதமர் மோடி, பி.ஜே.பி தலைவர் அமித் ஷா ஆகிய இருவரும் தீவிரமாக இருக்கின்றனர். எனவே, மாநிலத்துக்கு ஏற்ற சில மறைமுக வியூங்களை வகுத்து தங்கள் தீவிரத்தை செயல்படுத்தி வருகின்றனர்.இதன் ஒரு கட்டமாகத்தான் பீகாரில் மெகா கூட்டணியில் எப்படியாவது பிளைவை ஏற்படுத்தி விட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பீகார் லாலு இந்த சூழலில்தான் சி.பி.ஐ அதிகாரிகள் கடந்த 6-ம் தேதி ஒரு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்கின்றனர். அதில், லாலு பிரசாத் யாதவ் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ரயில்வே கேன்டீன் நடத்தும் உரிமைக்கான ஒப்பந்தத்தை, பி.என்.ஆர் ஹோட்டல்ஸ் என்ற பெயரைக் கொண்ட சுஜாதா ஹோட்டல்ஸ் நிறுவனத்துக்கு தருகிறார். ஒப்பந்தம் தரப்பட்ட அதே தேதியில் அந்த ஹோட்டல் நிறுவனத்தின் இன்னொரு துணை நிறுவனத்தின் மூலம் இரண்டு ஏக்கர் நிலம் லாலு பிரசாத் யாதவின் குடும்பத்திற்கு மாற்றப்படுகிறது. அதுவும் சந்தை விலையை விட குறைவாக விற்பனை செய்திருக்கின்றனர். ஹோட்டல் குத்தகைக்கு கிடைத்த தால், அதற்கு பலனாக லாலு குடும்பத்துக்கு நிலம் தரப்பட்டது என்பதுதான் சி.பி.ஐ-யின் குற்றசாட்டு.

பாயும் பழைய வழக்கு

லாலு பிரசாத் 2004 -ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ரயில்வே அமைச்சராக இருந்தார். அந்த சமயத்தில் அவரது மகன் தேஜஸ்வியின் வயது 15 முதல் 20 வயதுக்குள்தான் இருந்தது.  இந்த வழக்கில் லாலு, தேஜஸ்வி, ரஃப்ரி தேவி, மிசா பாரதி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 7-ம் தேதி லாலு, தேஜஸ்வி, ரஃப்ரி தேவி ஆகியோருக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் சி.பி.ஐ சோதனை நடத்தியது.
சி.பி.ஐ-யின் குற்றச்சாட்டும், சோதனையும்தான் இப்போது பீகார் அரசியலை கலங்க அடித்துக் கொண்டு இருக்கிறது. துணை முதல்வராக இருக்கும் தேஜஸ்வி பதவி விலக வேண்டும் என்றுபல முனை தாக்குதல்கள் நடக்கின்றன. மிஸ்டர் க்ளீன் என காட்டிக்கொள்ளும் நிதிஷ்குமாருக்கும், இந்த விவகாரம் பெரிய நெருக்கடியைக் கொடுத்து வருகிறது. துணை முதல்வரை ராஜினா செய்ய வேண்டும் என்று அவர் நேரடியாக ஏதும் சொல்லவில்லை. ஆனால், நிதிஷின் கட்சி நிர்வாகிகள் தேஜஸ்வி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றனர். இவர்களின் வாயை அடைக்கும் வகையில், என் மகன் தேஜஸ்வி ராஜினாமா செய்ய மாட்டார் என்று லாலு பிரசாத் யாதவ் உறுதியாக க் கூறி விட்டார்.

தேஜஸ்வி புறக்கணிப்பு

கடந்த 15-ம் தேதி (நேற்று) பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் நிதிஷ், துணை முதல்வர் தேஜஸ்வி பீகார் நிதிஷ்குமார் ஆகியோர் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், இதில் நிதிஷ் மட்டும் கலந்து கொண்டார். விழா மேடையில் நிதிஷ் குமாருக்கு அடுத்து தேஜஸ்விக்கு இருக்கை போடப்பட்டிருந்த து. ஆனால், அவர் விழாவுக்கு வரவில்லை. இதனால் நிதிஷ், லாலு இடையே பிரச்னை அதிகரித்துள்ளது என்று பீகார் அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.


ஏற்கெனவே, ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டபோது, மத்திய அரசின் முடிவுக்கு நிதிஷ்குமார் ஆதரவு தெரிவித்தார். அப்போது பி.ஜே.பி-யின் சார்பில் ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தப்பட்டுள்ள ராம்நாத்துக்கும் நிதிஷ் ஆதரவு தெரிவித்துள்ளார். எனவே, நிதிஷ்குமாரை எப்படியாவது பி.ஜே.பி பக்கம் மீண்டும் கொண்டு வந்து விட வேண்டும் என்று மோடி திட்டமிட்டுள்ளார்.
இதன் ஒரு கட்டமாகத்தான் லாலுவுக்கு எதிராக சி.பி.ஐ மூலம் மத்திய அரசு நெருக்கடி கொடுக்கிறது என்று சொல்கிறார்கள். நெருக்கடி முற்றினால், லாலுவுக்கும், நிதிஷ் குமாருக்கும் மோதல் வெடிக்கும் . இருவரும் பிரியக் கூடிய சூழல் ஏற்படும். இதைத்தான் பி.ஜே.பி எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. எனவேதான், நிதிஷ்குமார் அரசுக்கு தரும் ஆதரவை லாலு வாபஸ் பெற்றால், நாங்கள் ஆதரவு தருவோம் என்று பீகார் மாநில பி.ஜே.பி தரப்பில் வெளிப்படையாகச் சொல்லி விட்டார்கள். சி.பி.ஐ-யை வைத்து பீகார் அரசியலை நெருக்கடிக்குள் தள்ளியிருக்கும் மோடியின் திட்டம் இறுதி கட்டத்தில் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். சி.பி.ஐ அதற்கு ஒரு காரணியாக இருக்கிறது. இதே மோடியும், பி.ஜே.பி-யும் 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, காங்கிரஸ் அரசு சி.பி.ஐ அமைப்பை அரசியல் ரீதியாகப் பயன்படுத்துகிறது என்று சொன்னார்கள். இப்போது மட்டும் என்ன நடக்கிறது. ஆட்சிதான் வேறு. காட்சிகள் ஒன்றுதானே?  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement