Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நேதாஜி மரணம் தொடர்பாக மீண்டும் ஒரு ஆவணம் கண்டுபிடிப்பு!

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1945-ம் ஆண்டு விமான விபத்தில் இறக்கவில்லை என்று பிரான்ஸை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ஒருவர்  கூறியுள்ளார். 

netaji

தைவான் நாட்டில் 1945-ம் ஆண்டு நேரிட்ட விமான விபத்தில் சுபாஷ் சந்திர போஸ் இறந்துவிட்டார் என்கிறது மத்திய அமைச்சகத்தின் ஆவணங்கள். மேலும் கடந்த ஜனவரி மாதம், (நேதாஜியின் 120வது பிறந்தநாள் அன்று) நேதாஜி மரணம் தொடர்பான 100க்கும் மேற்பட்ட ஆவணங்களை, நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி வெளியிட்டார். அந்த ஆவணங்கள் அனைத்தும் தேசிய ஆவணக் காப்பகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்நிலையில் நேதாஜி மரணம் தொடர்பான பிரெஞ்சு ரகசிய ஆவணம் ஒன்றை வரலாற்று ஆய்வாளர் ஜே.பி.பி.மோரே கண்டறிந்துள்ளார். அவர் பாரிஸ் நகரத்தைச் சேர்ந்தவர். மோரேக்கு கிடைத்துள்ள அந்த ஆவணங்களில் 1945-ம் ஆண்டு நடந்த தைவான் விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளதாம். அந்த விமான விபத்தில் இறந்தது நேதாஜிதான் என்பதற்கு எந்த சான்றும் இல்லை என்று மோரே தெரிவித்துள்ளார். 

மத்திய அரசு நேதாஜி மரணம் தொடர்பாக இதுவரை மூன்று விசாரணைக் கமிஷன்கள் அமைத்து ஆவணங்களை வெளியிட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் நேதாஜி விமான விபத்தில்தான் இறந்தார் என்பதற்கு போதுமான சான்று இல்லை. இந்நிலையில் மோரே வெளியிட்டுள்ள இத்தகவல் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement