Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாநில அரசுகளின் பணம் வீணாகாமல் இருக்க ’நிதி ஆயோக்’ புதிய யோசனை!

மாநில அரசுகளின் நிதி அதிகப்படியாக வீணாவதாக மத்திய அரசு குறை கூறியதையடுத்து, நிதி வீணாவதிலிருந்து மாநில அரசுகளைக் காக்க மத்திய நிதி ஆயோக் புதிய யோசனை ஒன்றைத் தெரிவித்துள்ளது.

ஆதார்

மாநில அரசுகளின் இலவசத் திட்டங்கள் பயனாளிகளுக்கு சரியாக சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், தொடர்புடைய மாநிலங்கள் தனி ஆதார் சட்டத்தை இயற்ற வேண்டும் என நிதி ஆயோக் ஆலோசனை தெரிவித்துள்ளது. 

மத்திய அரசின் நலத்திட்டங்கள், மானியங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்போடு வழங்கப்படும் நலத்திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பல மாநிலங்கள் பல்வேறு இலவச பொருள்களையும், சேவைகளையும் தங்களது மக்களுக்கு அளித்து வருகின்றனர். ஆனால் அவை தகுதியான பயனாளிகளைச் சென்று சேர்கிறதா என்பதை உறுதி செய்ய வழிமுறை எதுவும் இல்லை. இதனால் மாநில அரசுகளின் பணம் வீணாவதற்கு வாய்ப்புள்ளதாக மத்திய அரசு கருதுகிறது. மத்திய அரசின் ஆதார் திட்டத்தின் கீழ் இவற்றை கண்காணிக்க வாய்ப்பில்லை. எனவே இலவசத் திட்டங்களுக்கும் ஆதாரை கட்டாயமாக்கும் வகையில் மாநிலங்கள் தனிச்சட்டம் இயற்றுவது நல்லது என நிதி ஆயோக் ஆலோசனை தெரிவித்துள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement