குடியரசுத் துணைத்தலைவர் தேர்தல்: இன்று வேட்புமனுத் தாக்கல்!

இந்தியக் குடியரசுத் துணைத்தலைவருக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது.

குடியரசுத் துணைத்தலைவர்

ஜூலை மாதத்துடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது. நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் ஆளும் பா.ஜ.க சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி சார்பில் மீராகுமார் போட்டியிடுகிறார். இதற்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. இதில் 99 சதவிகிதம் வாக்குப்பதிவு ஆகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.


இதனிடையே, துணைக் குடியரசுத்தலைவருக்கான தேர்தலில், எதிர்க்கட்சிகள் சார்பில் மகாத்மா காந்தியின் பேரனும் மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பா.ஜ.க சார்பில் மத்தியத் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சராக உள்ள வெங்கைய நாயுடு, துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

இதையடுத்து, பா.ஜ.க-வின் வெங்கைய நாயுடு இன்று காலை 11 மணி அளவில் வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளதாக பா.ஜ.க தலைவர் அமித் ஷா அறிவித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்தியும் இன்றே தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்யவுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!