பட்டியல் இனத்தவர்கள் பிரச்னையைப் பேச அனுமதி மறுப்பு: எம்.பி பதவியை ராஜினாமா செய்தார் மாயாவதி!

மாயாவதி

உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி, மாநிலங்களவை எம்.பி-யாகவும் இருந்து வந்தார். இந்நிலையில், நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி, தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் இன்றைய கூட்டத்தொடரின்போது, அவர் நாடு முழுவதும் பட்டியல் இனத்தவர்கள் மீதான தாக்குதல் குறித்து குரல் எழுப்பினார். ஆனால், அதற்கு மாநிலங்களவை துணைத் தலைவர் குரியன் அனுமதித் தரவில்லை. இதனால், மாயாவதி காலை வெளிநடப்பு செய்தார். இதையடுத்து, இந்த விவகாரத்தால் தற்போது மாயாவதி தனது மாநிலங்களவை எம்.பி பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!