Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆதார் வழக்கு..! 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வின் கீழ் விசாரணை

ஆதார் கார்டு முறைக்கு அரசியல் சாசன அங்கீகாரம் உள்ளதா என்பது குறித்து, உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஆதார் முறை தனிநபர் தகவல்கள் ரகசிய பாதுகாப்பை மீறுவதாக உள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதுதொடர்பான வழக்கு இன்று தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தனிநபர் ரகசியம் என்பது அடிப்படை உரிமை இல்லை என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தனி நபர் ரகசியம் என்பது அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமைகளில் ஒன்றாக வருமா என்பது குறித்து 9 பேர் அடங்கிய அமர்வு விசாரிக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனி நபர் ரகசிய உரிமை என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றாக வராது என்று ஏற்கெனவே இரண்டு வழக்குகளில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close