தேவகவுடா கட்சியில் வேட்பாளர் தேர்வு!

பெங்களூரு பத்மநாப நகரில் உள்ள முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நிறுவனருமான தேவகவுடா மற்றும்  தேவகவுடாவின் மகனும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி தலைமையில், 2018-ம் ஆண்டு கர்நாடக சட்டசபைக்கான வேட்பாளர்கள் தேர்வு,கடந்த  மூன்று நாள்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

குமாரசாமி

தேவகவுடா


தேவகவுடாவிற்கு சமீப காலமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால், தொடர்ந்து ஆயுர்வேதசிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார். 15 நாள்களாக சரியாக சிகிச்சை எடுத்துக்கொள்ளாததால், உடல் சற்று பலவீனம் அடைந்தது. ஆனால், தற்போது உடல்நிலை தேறி வருவதால், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கடந்துகொள்வதாக அவர் கூறினார்.

இதுபற்றி தேவகவுடாவின் மகனும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி, ''2018-ம் ஆண்டு கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்காக ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர் தேர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. முதற்கட்டமாக, மதச்சார்பற்ற ஜனதா தளம் எந்தெந்தத் தொகுதிகளில் ஓட்டு வங்கி அதிகமாகவும், கட்சியின் சார்பாக யாரை நிறுத்தினாலும் வெற்றிபெறுவார்கள் என்ற நிலையில் உள்ள தொகுதிகளின் வேட்பாளர் தேர்வு நடைபெறுகிறது. அந்தத் தொகுதியில், உட்கட்சி பூசல்களைக் களைந்து அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வேட்பாளர்களைத் தேர்வுசெய்துவருகிறோம். இன்று, சிக்பெல்லாப்பூர் தொகுதிக்கான வேட்பாளர் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அனைத்துத் தொகுதிக்குமான வேட்பாளர் தேர்வு முடிந்த பிறகு, வேட்பாளர் பட்டியல் வெளியிடுவோம்'' என்றார்.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!