Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுமண்டலம்: தமிழகத்தில் புயல்கூண்டு எச்சரிக்கை!

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுமண்டலத்தால், தமிழகத் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கை

ஒடிசா அருகே, வடமேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகக் கடலோரங்களில் புயல் எச்சரிக்கைக்கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நேற்று இரவு வங்கக்கடலில் உருவான இந்தக் காற்றழுத்தத் தாழ்வுமண்டலம், வட மேற்குத் திசையை நோக்கி நகர்வதால், தமிழகத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதே வேளை, ஆந்திரக் கடலோரப் பகுதிகளுக்குப் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வடமேற்குத் திசை நோக்கி புயல் நகரும்போது, மணிக்கு 45 முதல் 50 கி,மீ வேகத்தில் கடக்கும் என்பதால், வட தமிழகப் பகுதிகளில் பலத்த காற்று வீசும். இதையொட்டி, இன்று தமிழகத்தில் எண்ணூர், பாம்பன், புதுச்சேரி மற்றும் கடலூர் துறைமுகங்களில் 1-ம் எண் புயல்கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஆந்திரா,தெலங்கானா மாநிலங்களுக்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close