வெளியிடப்பட்ட நேரம்: 13:19 (20/07/2017)

கடைசி தொடர்பு:13:19 (20/07/2017)

அ.தி.மு.க ஆட்சியை எதிர்க்கிறாரா? கமல் சொல்வதெல்லாம் சரியா? - விகடன் சர்வே ரிசல்ட்ஸ் #VikatanSurveyResults

`பிக் பாஸ்' நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே கமல் சுற்றி சர்ச்சைகள்தான். அவர் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதால், இவற்றுக்கு பதில் சொல்லவேண்டிய பொறுப்பும் கமலுக்கு இருக்கிறது.


kamal கமல்

இந்து மக்கள் கட்சி இயக்கத்தினர், `பிக் பாஸ்' நிகழ்ச்சியைத் தடைசெய்ய வேண்டும்' என, சென்னை மாநகர காவல் துறை ஆணையரிடம் மனு அளித்தார்கள். தமிழ் மக்களின் கலாசாரச் சீரழிவுக்கு இந்த நிகழ்ச்சி வழிவகுப்பதாகச் சொன்னவர்கள், இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழ்த்தாய் வாழ்த்தைக் கொச்சைப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு வைத்தார்கள். இதற்கு எல்லாம் பதில் சொல்ல, பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் கமல். இந்தக் குற்றச்சாட்டுகள் உள்பட ரஜினி அரசியல் பிரவேசம், ஜி.எஸ்.டி வரி, அ.தி.மு.க அரசின் செயல்பாடு என பல்வேறு கேள்விகளுக்கும் பதில் சொல்லியிருந்தார். கமல் தன் பேட்டியில் சொன்ன விஷயங்களைப் பற்றி மக்கள் என்ன கருதுகிறார்கள் என்பதற்காகத்தான் இந்த சர்வே எடுத்தோம். 'கமல் சொல்வதில் தப்பே இல்லை' என பலரும், கமல் எப்போதுமே சர்ச்சைகுரிய மனிதர்தான் என சிலர் சொல்கிறார்கள். சரி, மக்கள் முடிவு என்ன சொல்கிறது. இதோ.... 

 

kamal


இந்த கேள்விக்கு ஏற்கத்தக்கதுதான் என 34.3 சதவிகிதம் பேரும், 'முத்தக் காட்சிகளாலோ, 'பிக் பாஸ்' நிகழ்ச்சியினாலோ கலாசாரம் சீர்கெடவில்லை' என 44.4 சதவிகிதம் பேரும், 'இது ஏற்கத்தக்கத்தல்ல' என 21.3 சதவிகித பேரும் கருத்து சொல்லியிருக்கிறார்கள். 

d

கமல் அவரது நற்பணி மூலமாக மக்களுக்கு பல வருடங்களாக உதவிகள் செய்தை மக்களும் ஏற்றுக்கொள்கிறார்கள். 44.4 சதவிகிதம் பேர் 'இது உண்மைதான்' என்கிறார்கள். 31.4 சதவிகிதம் பேர் 'நல்லது நடந்தால் சரி' எனவும், 24.2 சதவிகிதம் பேர் எங்களுக்கு அவர் உதவி செய்து வருவது தெரியாதே எனவும் சொல்கிறார்கள். 

S

இந்த கேள்விக்கு, 'கமல் அதற்கு தகுதியானவர்தான்' என 57.5 சதவிகிதம் பேரும், 'அப்படி ஒன்று நடக்கும்போதுதான் கருத்து சொல்ல முடியும்' என 36.3 சதவிகிதம் பேரும், 'அந்த அரசியல் தகுதி கமலுக்கு இல்லை 'என 6.2 சதவிகிதம் பேர் மட்டுமே நினைக்கிறார்கள்.

aa

இந்த கேள்விக்குதான் கமல் சொன்ன கருத்தை பலரும் எதிர்க்கிறார்கள். 'கிரிக்கெட் வேறு, 'பிக் பாஸ்' வேறு என்பதை கமல் புரிந்துக்கொள்ள வேண்டும்' என 44.3 சதவிகிதம் பேரும், 'சரி' என 37.3 சதவிகிதம் பேரும், 'தவறு' என 18.4 சதவிகிதம் பேரும் வாக்களித்திருக்கிறார்கள். 

gs

இந்த கருத்துக்கு மக்கள் அமோக ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். 70.2 சதவிகிதம் பேர் 'மற்ற மொழிகளில் சைவம் என்பதற்கு வேறு அர்த்தம் உண்டு. தமிழில் மட்டுமே அது மதத்தின் பெயரால் உலவுகிறது' என்பதை ஏற்கிறார்கள். 'அப்படி எல்லாம் கிடையாது' என 16.9 சதவிகிதம் பேரும், 'கமல் சொல்வது தவறு' என 12.8 சதவிகிதம் பேரும் கருதுகிறார்கள். 

gn

இதற்கு 56.9 சதவிகிதம் பேர் 'உண்மை' என்ற ஆப்ஷனை க்ளிக்கியிருக்கிறார்கள். 'சமாளிக்கிறார்' என 27.8 சதவிகித மக்களும், அபத்தம் என 15.3 சதவிகித மக்களும் நினைக்ககிறார்கள். 

aaa


பெரும்பான்மையான மக்கள் இந்த கருத்தையும் ஏற்கிறார்கள்.  'நியாயமானது' என 63.8 சதவிகிதம் பேர் வாக்களித்திருக்கிறார்கள். 18.8 சதவிகிதம் பேர் 'இதற்கு கருத்து சொல்ல விரும்பமில்லை' எனவும், 17.4 சதவிகிதம் பேர் 'இது ஏற்கத்தக்கதல்ல' என்றும் கருதுகிறார்கள். 

fd


'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவபடுத்தவில்லை என மக்கள் எண்ணுகிறார்கள். 59.1 சதவிகிதம் பேர் தமிழ்தாய் வாழ்த்து இழிவுபடுத்தபடவில்லை எனவும், 28.7 சதவிகிதம் பேர் 'சமாளிக்கிறார்' எனவும், 12.3 சதவிகிதம் பேர் இது ஒரு அபத்தமான செயல் எனவும் கருதுகிறார்கள். 

bc

இந்த கேள்விக்கும் மக்களின் முழு ஆதரவும் கமலுக்குதான். கமல் அ.தி.மு.க அரசை எதிர்ப்பது நியாயம்தான் என நினைக்கிறார்கள். 77.3 சதவிகிதம் பேர் கமல் சொன்ன கருத்தை ஏற்கிறார்கள். அவர் 'தமிழக அரசை எதிர்க்கவில்லை' என 13.5 சதவிகிதம் பேரும், 'தேவையில்லாமல் எதிர்க்கிறார்' என 9.2 சதவிகித மக்கள் மட்டுமே நினைக்கிறார்கள். மொத்ததில் கமல் சொன்ன பெரும்பான்மையான கருத்தை மக்கள் ஏற்கிறார்கள் என்பதே இந்த சர்வே முடிவில் தெரிகிறது. 


டிரெண்டிங் @ விகடன்