வெளியிடப்பட்ட நேரம்: 20:35 (20/07/2017)

கடைசி தொடர்பு:14:21 (21/07/2017)

'முடியாவிட்டால் விலகிக் கொள்ளுங்கள்': தமிழக அரசுக்கு கமல் புதிய ட்வீட்!

 

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுத்துறைகளிலும் ஊழல் நடப்பதாகக் கூறி அதிரவைத்தார் கமல்ஹாசன். அவரின் இந்தப் பேச்சுக்கு, அமைச்சர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர். "தி.மு.க-வின் ஊதுகுழலாக கமல்ஹாசன் செயல்பட்டு வருகிறார்" என்று குற்றம்சாட்டினர். பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்தார். இவருக்கும், அமைச்சர் ஜெயக்குமாருக்கும் நேற்று அதிரடியாகப் பதிலளித்தார் கமல்ஹாசன். "தம்பி ஜெயக்குமார் என்றும், எலும்பு வல்லுநர் ராஜா" என்றும் பதிலடி கொடுத்தார் கமல்.

கமல்ஹாசன்


பிக் பாஸ், அரசியல்வாதிகளுக்குப் பதில், புரோ கபடி லீக்கில் 'தமிழ் தலைவாஸ்' அணியின் நட்சத்திரத் தூதர் என்று கமலின் ஏரியாவில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை. கமலின் பரபர கருத்துக்கு, அமைச்சர்களும் பதிலளித்து வருகின்றனர். இந்நிலையில், கமல் மீண்டும் ஒரு பரபர ட்வீட் தட்டியுள்ளார்.

 


அந்த ட்வீட்டில், 'பள்ளிப் படிப்பை முடிக்காதவன் " நீட்" ன்கொடுமை புரியவில்லை. டெங்கு காய்ச்சல் புரியும். என் மகளுக்கு வந்தது. அதை கவனி அரசே! உமை யாம் கவனிப்போம்' என கூறியுள்ளார்.

 


அதாவது, 'பள்ளிப் படிப்பை முடிக்காத எனக்கு நீட் தேர்வின் கொடுமை புரியவில்லை. ஆனால், டெங்கு காய்ச்சலின் வலி புரியும். என் மகளுக்கு வந்துள்ளது. எனவே, அந்த பிரச்னையை கவனியுங்கள். இல்லையென்றால் விலகிக் கொள்ளுங்கள்' என்று கூறியுள்ளார்.