கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல்..! 11 ஊழியர்கள் தவிப்பு

கொல்கத்தாவிலிருந்து அந்தமான் நோக்கிச் சென்ற ஐடிடி பாந்தர் என்ற சரக்குக் கப்பல் கடலில் கவிழ்ந்தது. கடலில் பயணம் செய்த 11 ஊழியர்கள் கடலில் தவிக்கின்றனர் என்று தகவல் வெளிவந்துள்ளது.

கோப்புப்படம்

கொல்கத்தாவிலிருந்து ஐடிடி பாந்தர் என்ற இந்திய சரக்குக் கப்பல் அந்தமான் தீவு நோக்கிச் சென்றது. அப்போது மோசமான வானிலை காரணமாக அந்தமான் கடற்பகுதியில் கவிழ்ந்தது. திக்லிபூரில் இருந்து 120 நாட்டிக்கல் மைல் தொலைவில் கப்பல் கவிழ்ந்துள்ளது. கப்பல் கவிழ்ந்ததால் அதில் இருந்த கண்டெய்னர்கள் கடலில் மிதந்துகொண்டிருப்பதாகவும், கப்பல் ஊழியர்கள் 11 பேரும் கண்டெய்னர்களை பிடித்துக்கொண்டு உயிருக்குப் போராடியதாகவும் தகவல் வெளிவந்தன.

விபத்து பற்றி தகவல் அறிந்த கடலோரக் காவல் படையினர் ஹெலிகாப்டர்களில் புறப்பட்டுச் சென்று ஊழியர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். 63 மீட்டர் நீளம் கொண்ட இந்த சரக்குக் கப்பலில் 29 கண்டெய்னர்களில் 500 மெட்ரிக் டன் மணல், 200 மெட்ரிக் டன் இரும்பு மற்றும் ஒரு கார் ஆகியவற்றைக் கொண்டு செல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றனர். தற்போது கடல் மிகவும் சீற்றமாக காணப்படுவதால் உடனடியாக கப்பல் ஊழியர்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், கடலோரக் காவல் படையின் இரண்டு கப்பல்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!