உபசார விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உருக்கமான பேச்சு!

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதையடுத்து, உபசார விழா நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மஹாஜன், மத்திய அமைச்சர்கள், எம்பி-க்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிரணாப் முகர்ஜி

இதில் பேசிய பிரணாப் முகர்ஜி, ' அரசியலமைப்பைக் காக்க அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து போராட வேண்டும். நாடாளுமன்றத்தில் அமளி, வெளிநடப்பால் பயனுள்ள நேரம் வீணடிக்கப்படுவது வேதனையளிக்கிறது. 1969-ம் ஆண்டு, முதன்முறையாக மக்களவையில் உறுப்பினராக நான் நுழைந்தேன், சில சோகங்களையும், வானவில் போன்ற வண்ணமயமான நினைவுகளையும் சுமந்துகொண்டு வெளியேறுகிறேன். இந்திய நாடாளுமன்றத்துடனான என்னுடைய உறவு இத்துடன் முடிகிறது. மனநிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் விடைபெறுகிறேன், எனக்கு ஒத்துழைப்பு அளித்த பிரதமர் மோடி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி' என்றார்.

இதனிடையே, குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ராம்நாத் கோவிந்த், நாளை மறுநாள் 25-ம் தேதி பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!