Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தீவிரவாதத் தாக்குதல்: இந்தியாவுக்கு மூன்றாவது இடம்

கடந்த 2016-ம் ஆண்டில், தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகமாக நடந்த நாடுகளின் பட்டியலில், இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. 


உலகம் முழுவதும் கடந்த வருடம் நடந்த தீவிரத் தாக்குதல்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்து அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அதில், 2,965 தீவிரவாதத் தாக்குதல்களைச் சந்தித்து, ஈராக் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த படியாக, 1,340 தாக்குதல்களைச் சந்தித்து, ஆப்கானிஸ்தான் இரண்டாம் இடத்தில் உள்ளது. 


இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவில்,  972  தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன. ஜம்மு-காஷ்மீர், சத்தீஸ்கர், மணிப்பூர், ஜார்கண்ட் ஆகிய நான்கு மாநிலங்களில்தான் பாதிக்கும் அதிகமான தாக்குதல்கள் நடந்துள்ளன. 

இந்த ஆண்டில் மட்டும், இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல்கள் 16 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தாக்குதல்களில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17 சதவிகிதம் அதிகரித்துள்ளது. சராசரியாக, இந்தியாவில் நடந்த ஒவ்வொரு தாக்குதலிலும் 0.4 பேர் மரணமடைந்துள்ளனர். உலக அளவில் ஒவ்வொரு தாக்குதலிலும் 2.4  பேர் மரணமடைகிறார்கள் எனத் தெரியவந்துள்ளது. 

இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் நான்காம் இடத்தில் உள்ளது.   

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close