போதைப்பொருள் வழக்கு : தெலுங்கு திரைப் பிரபலங்கள் இன்று ஆஜர்!

போதைப் பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக, தெலுங்கு திரைப்பட  நடிகர் நவ்தீப், நடிகைகள் முமைத்கான் மற்றும் சார்மி ஆகியோர் இன்று ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 Hyderabad drug racket
 

தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் பலர் போதைப்பொருள் பயன்படுத்துவதாகப் புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கெல்வின் என்ற போதைப்பொருள் கடத்தல்காரரை தெலுங்கானா காவல்துறை கைதுசெய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கைதுசெய்யப்பட்ட கெல்வின், ஹைதராபாத்துக்கு போதைப்பொருள்களைக் கடத்தி வந்து இடைத்தரகர்மூலம் நடிகர் நடிகைகளுக்கு சப்ளைசெய்ததாக வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கு, தெலுங்கு திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த வழக்கில், தெலுங்கு திரைப் பிரபலங்கள் நவ்தீப், தருண், சார்மி, முமைத்கான், டைரக்டர் பூரி ஜெகன்னாத் உள்ளிட்ட 12 பெயர்கள் இருப்பதாக, மாநில உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. பின்னர் இந்த வழக்கில் தொடர்புடைய பிரபலங்களுக்கு, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் நோட்டீஸ் அனுப்பிவருகின்றனர். இந்த வழக்கில் நவ்தீப், சார்மி, முமைத்கான் ஆகியோர் இன்று ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!