Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மரபணு மாற்ற கடுகை அனுமதிக்க வேண்டாம் - மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

 மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை, வணிகரீதியாகப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கக்கூடாது என மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தனுக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

ஸ்டாலின்


 தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்த்தனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் , "இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான நாடுகள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களைத் தங்கள் நாட்டுக்குள் நுழைய விடுவதில்லை. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதையுடன் தெளிக்கப்படும் ரசாயனம், மனித குலத்துக்கு மிகவும் ஆபத்தானது என்பதால், இதை உலகில் உள்ள பெரும்பான்மையான நாடுகள் எதிர்க்கின்றன. மரபணு மாற்றப் பயிர்கள் இயற்கையின் நலனுக்கும், மக்களின் ஆரோக்கியத்துக்கும் சற்றும் உகந்தது அல்ல என்பதால், மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்"எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை வணிகரீதியாகப் பயன்படுத்துவதற்கு சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறையின் கீழ் இயங்கும் மரபணு பொறியியல் அங்கீகாரக் குழு கட்டுப்பாடு, அனுமதி வழங்கியிருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் கூறியுள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close