கட்சியின் பொதுச் செயலாளரையே எதிர்க்கும் கேரள முதல்வர்!

’மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தேர்வு செய்யப்பட்டால், அது கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானதாகும்’ என அதே மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் கேரள முதல்வருமான பினராயி விஜயன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பினராயி விஜயன்

காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு மீண்டும் ராஜ்யசபா வேட்பாளராக சி.பி.எம் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியைத் தேர்வு செய்யும் வேலைகள் தொடங்கியுள்ளன. 'மூன்றாவது முறையாக, சீதாராம் யெச்சூரி தேர்வு செய்யப்படுவது கட்சியின் கொள்கைளுக்கு எதிரான நடைமுறை' எனக் கொந்தளிக்கத் தொடங்கியிருக்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

இதுகுறித்து பினராயி விஜயன் கூறும்போது, ‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கொள்கைகளின் அடிப்படையில் கட்சியின் பொதுச் செயலாளர் என்பவர் நாடு முழுவதும் கட்சிப் பணிகளுக்காகப் பயணம் செய்துகொண்டே இருக்கவேண்டிய சூழல் கொண்டவர். சீதாராம் யெச்சூரியின் திறமைக்காக அவரை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஆனால், அவருக்கு கட்சிப் பொதுச் செயலாளர் என்ற மிகப் பெரிய பொறுப்பு உள்ளது’ எனப் பேசியிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!