'ஆளில்லா வாகனங்களுக்கு நோ என்ட்ரி...!'- நிதின் கட்கரி திட்டவட்டம் | We won’t allow driver less cars in India, Nitin Gadkari

வெளியிடப்பட்ட நேரம்: 20:25 (25/07/2017)

கடைசி தொடர்பு:21:06 (25/07/2017)

'ஆளில்லா வாகனங்களுக்கு நோ என்ட்ரி...!'- நிதின் கட்கரி திட்டவட்டம்

நாளுக்கு நாள் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வேகம் எடுத்துக் கொண்டே இருக்கின்றன. உலக நாடுகளும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றாற் போல் தங்களின் பொருளாதாரக் கொள்கைகளையே மாற்றி வருகின்றன. இந்நிலையில் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, 'ஆளில்லா வாகனங்களை இந்தியாவில் அனுமதிக்க முடியாது' என்று கூறியுள்ளார்.

நிதின் கட்கரி

அவர் மேலும், 'இன்று நம் நாட்டில் பல லட்சம் பேர் கார் மற்றும் கன ரக வாகனங்களை ஓட்டும் வேலையை மட்டுமே நம்பியுள்ளனர். இப்போது, ஆளில்லா வாகன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினால், பல லட்சம் பேர் வேலை இழக்க நேரிடும். மக்களின் வேலையைப் பறிக்கும் எந்த தொழில்நுட்பத்தையும் அனுமதிக்கக் கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறோம்' என்று கூறியுள்ளார். அமைச்சர் இதைப்போல் பேசியவுடன் பொருளாதார வல்லுநர்கள், 'ஒரு தொழில்நுட்பத்தை வெகு நாள்களுக்கு நம்மால் ஒதுக்க முடியாது. மொத்த உலகமும் ஒரு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போது அதை நாம் தவிர்க்க முடியாது' என்று கருத்து கூறி வருகின்றனர்.