வெளியிடப்பட்ட நேரம்: 21:54 (25/07/2017)

கடைசி தொடர்பு:22:02 (25/07/2017)

ஒரே ட்வீட்டில் 30 லட்சம் ஃபாலோயர்ஸ்..!- கலக்கிய ஜனாதிபதி

125 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் ஜனாதிபதியாக ராம் நாத் கோவிந்த் பதவியேற்பதற்கு இரண்டு நிமிடத்திற்கு முன் அவரின் முதல் ட்வீட் இந்திய ஜனாதிபதிக்கான டிவிட்டர் கணக்கில் இடப்பட்டது .  " 'என் பணிகளை பணிவுடன் நிறைவேற்றுவேன்' என்கிற உறுதிமொழியுடன் இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாகப் பதவியேற்றார்"  என்கிற ட்வீட்டே அவரின் முதல் செய்தியாகும். 

டிவிட்டர்


மதியம் 12.15-க்கு இந்தியாவின் ஜனாதிபதியாகத் ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்றத்தின் மத்திய கூட்ட அவையில்  பொறுப்பேற்றார். இந்தியாவின் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். "இந்தப் பெருமைமிகு வாய்ப்பினை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். டாக்டர் ராதாகிருஷ்ணன், அப்துல்கலாம், பிரணாப் முகர்ஜி பாதையில் செயல்படுவேன்" என்று அவர் அப்போது தெரிவித்தார்.  

அதன் பின் சரியாக 12.44 மணிக்கு,  "என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் பொறுப்பை அளித்துள்ள 125 கோடி மக்களுக்கும் உண்மையாக இருப்பேன் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தன் இரண்டாவது டிவிட்டை எழுதினார்.  இதில் இன்னொரு ஆச்சரியப்படும் செய்தி அவர் முதல் ட்வீட்டை எழுதும் முன்னரே 30 லட்சத்துக்கும் அதிகமானோர் அவரை ட்விட்டரில் பின் தொடரத்து விட்டனர் என்பதுதான். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க