Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

செயல்படாத ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை: பணியாளர் நலத்துறை அதிரடி!

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற உயர் பதவிகளில் பணியாற்றும் அதிகாரிகள் சரியாகச் செயல்படாததற்காக, அவர்கள்மீது மத்தியப் பணியாளர் நலத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

மத்திய அரசு

‘புதிய இந்தியாவுக்கான அடித்தளம்’ என்ற தலைப்பின்கீழ் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கடந்த மூன்றாண்டு நடவடிக்கை குறித்து ஓர் ஆய்வறிக்கை தயார் செய்யப்பட்டது. பிரதமர் மோடியிடம் அளிக்கப்படவேண்டிய இந்த ஆய்வறிக்கையை மத்தியப் பணியாளர் நலத்துறை அமைச்சகம் தயாரித்தது. இது தொடர்பான விரிவான விளக்கக் கையேடு, தற்போது பிரதமர் மோடியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், ‘நாட்டில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற உயர் பதவிகளில் பணியாற்றும் அதிகாரிகள் 381 மீது ஊழல், பணியில் செயலின்மை போன்ற காரணங்களுக்காக, மத்தியப் பணியாளர் நலத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, நாடு முழுவதும் பணியாற்றிவரும் 2,953 ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட 11,828 ஏ பிரிவு அதிகாரிகள், 19,714 பி பிரிவு அதிகாரிகளின் பதிவேடுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதன்படி, மத்திய உயர் பணியில் உள்ள 25 ‘ஏ’ பிரிவு அதிகாரிகளுக்கும் 99 ‘பி’ பிரிவு அதிகாரிகளுக்கும் ஓய்வுக் காலத்துக்கு முன்னதாகவே ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 37 ‘ஏ’ பிரிவு அதிகாரிகளுக்கு ஓய்வு ஊதியம் ரத்துசெய்யப்பட்டு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. தற்போது பணியில் இருக்கும் அதிகாரிகள் மீதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பணியிலிருந்து தவறுபவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close