மீண்டும் முதல்வர் ஆகிறார் நிதிஷ் குமார்!

பீகார் மாநில முதல்வராக நாளை மீண்டும் பதவியேற்கிறார் நிதிஷ் குமார்.

Modi and NIthish kumar


பீகாரில் கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தினர். தேர்தலில் வெற்றி பெற்ற அந்தக் கூட்டணியில், ஜனதா தளம் சார்பில் நிதிஷ் குமார் முதல்வராகவும், ராஷ்டிரிய ஜனதாதளம் சார்பில் லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். 

துணை முதல்வர் தேஜஸ்வி வீட்டில் ஊழல் புகார் காரணமாக சிபிஐ சோதனை நடைபெற்றது. இந்த விவகாரத்தில் தேஜஸ்வியை நிதிஷ்குமார் பதவி விலக வலியுறுத்துவதாக தகவல்கள் வெளிவந்தன. இதற்கிடையில், தேஜஸ்வி துணை முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யமாட்டார் என்று லாலு பிரசாத் யாதவ் தெரிவித்திருந்தார். ஜனாதிபதி தேர்தலிலும் பா.ஜ.க வின் ராம்நாத் கோவிந்த்-க்கு ஆதரவு தெரிவித்தார் நிதிஷ் . கருத்து  வேறுபாடுகள் முற்றியிருந்த நிலையில், இன்று திடீரென பீகார் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்தார். பீகார் ஆளுநர் கேசரிநாத் திரிபாதியைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். நிதிஷ் குமார் ராஜினாமாவை ஆளுநரும் ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில் தற்போது பீகாரில் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் நாளை மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார் நிதிஷ் குமார். பா.ஜ.க மற்றும் ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நிதிஷ் குமார் இல்லத்தில் நடைபெற்றது. நாளை மாலை 5 மணிக்கு பதவியேற்பு நிகழ்வு நடைபெற உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!