65 ஆண்டுகளில் இந்தியச் சாலைகளில் வாகனங்களின் வளர்ச்சி! #DataStory #VikatanInfographics | India's Vehicle population in 65 years

வெளியிடப்பட்ட நேரம்: 20:24 (27/07/2017)

கடைசி தொடர்பு:20:24 (27/07/2017)

65 ஆண்டுகளில் இந்தியச் சாலைகளில் வாகனங்களின் வளர்ச்சி! #DataStory #VikatanInfographics

இன்றைய சூழலில் சமூக அந்தஸ்துக்கும், போக்குவரத்து வசதிகளுக்கும் வாகனங்கள் அவசியத் தேவையாக மாறிவிட்டன. இந்தியாவில் இருசக்கர வாகனங்கள், கார்கள், டாக்ஸிகள் போன்ற வாகனங்களும், வர்த்தகப் பரிமாற்றத்தில் பெரிதும் உதவும் சரக்கு வாகனங்களும், பொதுமக்கள் போக்குவரத்துக்குப் பேருந்துகளும் பெருமளவில் அதிகரித்துவிட்டன. ஒரு காலத்தில் சைக்கிள் வைத்திருந்தால் பெரிய மனிதர், இருசக்கர வாகனம் வைத்திருந்தால் வசதி படைத்தவர் என்று மாறியது, பின்னர் கார்கள் நடுத்தர வர்க்கத்தின் பட்ஜெட்டில் இடம் பிடித்தன. இப்போது இரு சக்கர வாகனமும், கார்களும் நடுத்தர வர்க்கம் வரை உள்ள அனைவரது வீட்டுக்குள்ளும் நுழைந்துவிட்டன. 1951-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை 65 ஆண்டுகளில் இந்தியச் சாலைகளில் வாகனங்களின் வளர்ச்சி நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது. 

1951ம் ஆண்டு கணக்கின் படி இந்தியாவில் மொத்தமே 3 லட்சம் வாகனங்கள்தான் இருந்துள்ளன. அதில் வெறும் 8.8 சதவிகிதம்தான் இரு சக்கர வாகனங்கள். ஆனால் இன்றைய நிலை அப்படியில்லை. தலைகீழாக மாறியுள்ளது. 2015-ம் ஆண்டு இந்தியாவில் மொத்தம் 21 கோடி வாகனங்கள் உள்ளன. அதில் இருசக்கர வாகனங்கள் மட்டும் 15.4 கோடி. இந்தியாவில் இரு சக்கர வாகனங்கள் என்பது இன்றைய மொத்த வாகன எண்ணிக்கையில் 73.5 சதவிகிதம். இந்த வாகன வளர்ச்சியில் இரண்டு முக்கியமான நிகழ்வுகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. முதலாவது 1990-ம் ஆண்டு வரை மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடிக்கும் குறைவாகவே இருந்தது. 1991-ம் ஆண்டு இந்தியா உலகமயமாதல் கொள்கையை கையிலெடுக்கிறது. இதனால் வாகன நிறுவனங்களின் வருகை எளிதாகி, இந்தியாவின் வாகன வளர்ச்சி பன்மடங்காக அதிரிக்கத் தொடங்கியது. அதேபோல் 2000-த்துக்குப் பிறகு ஐ.டி துறை வேகமெடுத்த பின்பு கார்களின் விற்பனையும் எண்ணிக்கையும் அதிவேகமாக வளர்ந்துள்ளன. அதுவரை லட்சங்களில் இருந்த கார்களின் எண்ணிக்கை முதல்முறையாகக் கோடிகளைத் தொட்டது 2005-ன் ஆரம்ப காலத்தில்தான். 

கடந்த 65 வருடங்களில் இந்தியாவில் இருசக்கரவாகனங்கள், கார் மற்றும் டாக்ஸிகள், சரக்கு வாகனங்கள், பேருந்துகளின் வளர்ச்சி 

வாகனங்களின் வளர்ச்சி


டிரெண்டிங் @ விகடன்