காங்கிரஸில் இருந்து பா.ஜ.க-வில் இணைந்த மூன்று எம்.எல்.ஏ-க்கள்: குஜராத் அரசியலில் பரபர!

குஜராத்தில், காங்கிரஸிலிருந்து மூன்று எம்.எல்.ஏ-க்கள் விலகி, பா.ஜ.க-வில் இணைந்தனர்.

குஜராத் எம்எல்ஏ-க்கள்


நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலில், குஜராத்தில் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 11 பேர் வாக்களித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, குஜராத்திலிருந்து மூன்று மாநிலங்களவை எம்.பி-க்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதற்காக, பா.ஜ.க சார்பில் அமித் ஷா மற்றும் ஸ்மிருதி இரானி ஏற்கெனவே வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.


அதேபோல காங்கிரஸ் கட்சியின் சார்பில், கட்சியின் மூத்த தலைவர் அகமது படேலும் மாநிலங்களவைத் தேர்தலுக்கு போட்டியிடுகிறார். இந்நிலையில், பால்வாந்த் சிங் ராஜ்புத், தேஷ்ஸ்ரீ படேல் மற்றும் பி.ஐ. படேல் ஆகிய மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் காங்கிரஸில் இருந்து விலகி, பா.ஜ.க-வில் இணைந்துள்ளனர். 


குறிப்பாக ராஜ்புத், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். அவரை, அகமது படேலுக்கு எதிராகக் களமிறக்க, பா.ஜ.க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே,  குஜராத் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சங்கர்சிங் வகேலா, காங்கிரஸில் இருந்து விலகியுள்ளார். அடுத்தடுத்து  நான்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் விலகியுள்ளதால், குஜராத் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!