வெளியிடப்பட்ட நேரம்: 09:56 (28/07/2017)

கடைசி தொடர்பு:18:52 (28/07/2017)

விவசாயக்கடன் தள்ளுபடி: மஹாராஷ்ட்ராவில் மொபைல் ஆப் அறிமுகம்!

கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவிவருகிறது. இதையடுத்து, வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். குறிப்பாக, மத்தியப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் தீவிர போராட்டங்கள் நடந்தன. 

தேவேந்திர பட்னாவிஸ்

இதையடுத்து, விவசாயக்கடனைத் தள்ளுபடி செய்வதாக, மத்தியப்பிரதேச மற்றும் மஹாராஷ்டிர அரசுகள் தெரிவித்தன. மகாராஷ்டிர மாநிலத்தில், விவசாயிகளுக்கு தலா ஒன்றரை லட்சம் ரூபாய் வரையிலான கடன் தொகை தள்ளுபடிசெய்யப்பட்டது. இதற்காக, 34 ஆயிரம் கோடி ரூபாயை மாநில அரசு ஒதுக்கியது. குறிப்பாக, விவசாயிகளின் கடன் தள்ளுபடிக்காக எம்.எல்.ஏ-க்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்கியதாகவும், மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.


இந்நிலையில், விவசாயக் கடனைத் தள்ளுபடிசெய்வதற்கு, மாநில அரசு மொபைல் ஆப் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக, தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யக் கோரும் விவசாயிகள், அந்த ஆப் மூலம் விண்ணப்பிக்கலாம். அந்த ஆப் இன்னும் மூன்று நாள்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.