வெளியிடப்பட்ட நேரம்: 17:22 (28/07/2017)

கடைசி தொடர்பு:17:22 (28/07/2017)

மது போதையில் கார் ஓட்டிய பெண், காவலருக்குத் தந்த அதிர்ச்சி!

கொல்கத்தாவில், மதுபோதையில் கார் ஓட்டி வந்த பெண்ணை, தடுத்து நிறுத்திய காவலருக்கு, அந்தப் பெண் முத்தம் கொடுத்துள்ளார். 

மதுபோதை பெண்

Representational Image


கொல்கத்தாவின் சிங்ரிஹட்டா என்ற பகுதி அருகே, ஒரு பெண் மது போதையில் கட்டுப்பாட்டை இழந்து காரில் சென்றுள்ளார். அப்போது, சாலையில் இருந்து தடுப்பு ஒன்றின் மீது கார் மோதியுள்ளது. இந்த சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கால் டாக்ஸி டிரைவர் ஒருவர், அந்தப் பெண்ணை காப்பாற்ற சென்றுள்ளார். ஆனால் அந்தப் பெண், டிரைவரை அடித்துவிட்டார்.


இதையடுத்து,  போக்குவரத்து காவலர்கள் இரண்டு பேர் அந்தப் பெண் மற்றும் வாகனத்தில் இருந்த மேலும் இரண்டு பேரை கீழே இறங்க கூறியுள்ளனர். இந்நிலையில், கார் ஓட்டிய பெண்மணி, ஒரு காவலரை இழுத்து கட்டிப்பிடித்து, முத்த மழைகளை பொழிந்துள்ளார். பிறகு அருகில் இருந்த மற்றொரு காவலர், சக காவலரை பெண்ணின் பிடியில் இருந்து மீட்டுள்ளார்.


காரில் இருந்த மற்றொரு பெண் மற்றும் ஆண் ஆகியோரும் போதையில் இருந்துள்ளனர். இதையடுத்து  அந்தப் பெண் மற்றும் அவரின் நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையில், அவர்கள் இரவு பார்ட்டி ஒன்றுக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பும்போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.