ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் மீது பாதுகாப்பு வீரர்கள் தாக்குதல்!

டெல்லி ராஜிவ் சவுக் மெட்ரோ ரயில் நிலைய பாதுகாப்பு காவலர்கள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் ஒருவரை கடுமையாகத் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 


ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலை படிக்கும் மாணவர் அமன் சின்ஹா. அவர் ஃபேஸ்புக்கில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், 'நான் டெல்லி ராஜிவ் சவுக் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்தேன். அங்கிருந்த பாதுகாப்பு காவலர்கள், காதில் மாட்டியிருந்த இயர் போனை கழட்டச் சொன்னார்கள். நான் முடியாது என்றேன். அதனால் வாக்குவாதம் பெரிதானது. உடனே மற்றொரு காவலர் ஒருவர், நீ நாட்டை கெடுக்கிறாய்.

நீ முஸ்லிம். நாங்கள் உன்னை பாகிஸ்தானுக்கு அனுப்பப்போகிறோம் என்று, என்னை தனி அறை ஒன்றுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே வைத்து அவர்கள் என்னை அடித்தார்கள். எனது அம்மா, தங்கையைத் தகாத வார்த்தைகளில் திட்டினார்கள். அவர்களை வீடியோ எடுக்க முயற்சி செய்தேன். என் போனை புடுங்கி  எறிந்துவிட்டார்கள்' என்று பதிவிட்டுள்ளார். ஆனால் மாணவனின் இந்தச் குற்றச்சாட்டை பாதுகாப்பு வீரர்கள் மறுத்துள்ளனர். மாணவனிடம் இருந்து மன்னிப்புக் கடிதம் மட்டுமே எழுதி வாங்கினோம் என்று பாதுகாப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அதிகாரி தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!