’பா.ஜ.க என் தாய்’- விலகல்குறித்து உருகும் வெங்கைய நாயுடு

 பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளரான வெங்கைய நாயுடு, 2020-ம் ஆண்டு பொதுவாழ்க்கைக்கு முற்றுபுள்ளி வைக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

Venkaiah Naidu
 

ஹைதராபாத்தில் நேற்று, ’Meet and Greet’ என்னும்  நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய வெங்கைய நாயுடு, ‘நீண்ட காலமாகவே, அரசியல் வாழ்க்கையில் இருந்து விலகி, என் கிராமத்துக்குச் சென்று சேவைசெய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். 2020-ம் ஆண்டு, என் பொதுவாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகிறேன். இதை, பிரதமர் மோடியிடமும் தெரிவித்துவிட்டேன். என் கிராமத்துக்குச் சென்று சமூக சேவையில் ஈடுபட உள்ளேன். பா.ஜ.க என் தாய் போன்றது. அதை விட்டு விலகுவது மிகவும் வருத்தமாக உள்ளது’ என்று குறிப்பிட்டுப் பேசினார்.

வெங்கைய நாயுடு துணை ஜனாதிபதியானால், அவரின் பதவிக் காலம்  2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முடிகிறது. மேலும், 2019-ம் ஆண்டு ஜூலை மாதம், வெங்கைய நாயுடுவுக்கு 69 வயது நிறைவடைகிறது. 2020-ம் ஆண்டு, பொதுவாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!