'நாட்டுக்காக இதைச் செய்யுங்கள்': பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வோர் மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில், 'மன் கி பாத்' என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் மக்களுடன் உரையாடி வருகிறார். 

மோடி


இந்நிலையில், இன்று அவர் 'மன் கி பாத்' உரையில் மோடி, "ஜி.எஸ்.டி வரி இந்திய பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. உலக நாடுகளுக்கே ஒரு முன்னோடி சட்டமாக, ஜி.எஸ்.டி திகழ்கிறது. மகளிர் உலகக் கோப்பையில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய, நமது வீராங்கனைகளுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது வெற்றியை இந்திய மக்கள் வரவேற்றவிதம் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.


குஜராத், ராஜஸ்தான், அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தை சரி செய்ய தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். 1078 என்ற உதவி மையம் 24 நேரமும் செயல்பட்டு வருகிறது. இன்று நாட்டுக்காக யாரும் உயிர் தியாகம் செய்யத்தேவையில்லை. அனைவரும் நாட்டுக்காக வாழ வேண்டும். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவினாலே போதும்.


கடந்த ஆண்டு எனது சுதந்திர தின உரை மிகவும் நீளமாக இருந்ததாக கூறினர். இந்த ஆண்டு 40-50 நிமிடங்களில் எனது சுதந்திர தின உரையை முடிக்க திட்டமிட்டுள்ளேன். சாதிகளற்ற, வறுமையில்லாத, தீவிரவாதமற்ற, தூய்மையான இந்தியாவை உருவாக்குவோம் என்று உறுதியெடுத்துக் கொள்வோம்" என்று பேசினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!