வருமான வரி தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்!

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய நாளையே கடைசி நாள் என்றுள்ள நிலையில் வருமான வரித்துறை அலுவலகங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

வருமான வரிக்கணக்கு

நிதியாண்டு 2017-18 க்கான வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கு திங்கள் கிழமை (31/07/2017) கடைசி நாளாகும். இதை முன்னிட்டு சென்னை வருமான வரித்துறை அலுவலகம் விடுமுறை தினமான இன்றும் திறக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துவோருக்கு வசதியாகக் கூடுதல் சிறப்புக் கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

இதுவரையில் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் வருமான வரி சேவை மையங்களில் தங்கள் கணக்குகளை சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் மற்றும் தாம்பரத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் ஆகிய இடங்களிலும் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மக்கள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க சிறப்புக் கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டாலும் காலை வேளைகளிலேயே வந்து கணக்கை சமர்ப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை கடைசி நாள் என்பதால் மக்களுக்கு வசதியாக ஞாயிற்றுக்கிழமையான இன்றும் மாலை 5.30 மணி வரையில் கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!