3,500 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்: அசத்திய ‘சமுத்ரா பவக்’!

இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக அதிகப்படியான போதைப்பொருள் கடலோரக் காவல்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

போதைப் பொருள்

இன்று மதியம் இந்தியக் கடலோரக் காவல்படையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் நடந்த சோதனையில் அதிகளவிலான போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தியக் கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரா பவக்’ என்ற கடலோரக் காவல் படைக் கப்பல் குஜராத் மாநில எல்லோயோரக் கடலில் சோதனை ரோந்தில் ஈடுபட்டது. அப்போது கடலில் பயணித்துக் கொண்டிருந்த சரக்குக் கப்பலை புலனாய்வுத் துறையினர் சோதனை நடத்தினர்.

சோதனையின் போது 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான 1500 கிலோ ஹெராயின் அந்தக் கப்பலில் கடத்தப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, கடலோரக் காவல் படையினர் விரைந்து செயல்பட்டு கடத்தப்பட்ட போதைப்பொருளைக் கைப்பற்றினர்.  மதியம் 12 மணி அளவில் நடைபெற்ற இந்த சோதனை தற்போது வரையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது கடற்படை மற்றும் புலனாய்வுத்துறையினர் இணைந்து கூட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த அளவில் இதுவரையில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதில்லை. முதன்முறையாக 3500 கோடி ரூபாய் மதிப்பிலான 1500 கிலோ ஹெராயின் கடலோரக் காவல் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!