’சிகிச்சைக்காக கஞ்சா பயன்படுத்தலாம்’: ஏற்கப்பட்ட மேனகாவின் பரிந்துரை! | Marijuana usage became legal for medicinal purposes

வெளியிடப்பட்ட நேரம்: 21:22 (30/07/2017)

கடைசி தொடர்பு:21:22 (30/07/2017)

’சிகிச்சைக்காக கஞ்சா பயன்படுத்தலாம்’: ஏற்கப்பட்ட மேனகாவின் பரிந்துரை!

மருத்துவக் காரணங்களுக்காக கஞ்சாவை பயன்படுத்த அனுமதி கேட்ட மேனகா காந்தியின் பரிந்துரையை மத்திய அமைச்சர்கள் குழு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

மேனகா காந்தி

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேலாண்மை அமைச்சர் மேனகா காந்தி, மத்திய அமைச்சர்கள் குழுவிடம் பரிந்துரை ஒன்றை சமர்ப்பித்தார். அதில் மேனகா காந்தி கூறுகையில், ‘அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மருத்துவ சிகிச்சைகளுக்காக கஞ்சா பயன்படுத்த அனுமதி உள்ளது. இதேபோல் இந்தியாவிலும் மருத்துவ பயன்பாட்டுக்காக கஞ்சா பயன்படுத்த சட்ட ரீதியிலான அனுமதி வேண்டும். புற்றுநோய் மருத்துவ சிகிச்சையில் கஞ்சா பெரும் பங்காற்றுகிறது’ என்றார்.

இந்தப் பரிந்துரை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்தப் பரிந்துரையை ஏற்ற மத்திய அமைச்சர்கள் குழு மேனகாவின் பரிந்துரைக்கு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையை தீவிரமாக மேற்கொள்ள வேண்டுமென்றும் மேனகா காந்தி கோரிக்கை வைத்துள்ளார். சிறுவர்களிடம் போதைப்பொருள் பயன்பாட்டைக் குறைக்க முயற்சி எடுத்து வருவதாகவும் மேனகா கூறியுள்ளார்.