Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சரித்திர சாதனை படைத்த சென்செக்ஸ் நிலவரம்!

வாரத்தின் முதல் நாளான இன்று என்றும் இல்லாத அளவுக்கு பங்குச்சந்தை சென்செக்ஸ் நிலவரம் உச்சத்தில் நிறைவடைந்துள்ளது.

பங்குச்சந்தை

உலகச் சந்தைகளில் நிலவி வரும் நிச்சயமற்ற தன்மை, சர்வதேச அரசியல் சூழல், சந்தை நிலவரத்தின் முக்கியக் காரணியான கச்சா எண்ணெய் விலையேற்றம், இவையனைத்தையும் கடந்து இன்றைய இந்திய பங்குச்சந்தை உச்சத்தில் நிறைவடைந்துள்ளது. இன்று மாலை வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 205.06 புள்ளிகள் உயர்ந்து, 32,514 புள்ளிகளாக நிறைவடைந்தது. அதே வேளை, தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 62.60 புள்ளிகள் உயர்ந்து, 10,077 புள்ளிகளாகி நின்றது.

இந்திய பங்குச்சந்தை வரலாற்றிலேயே முதன்முறையாகப் பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 32,000 புள்ளிகள் அதிகரித்துள்ளது வர்த்தகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வர்த்தக நிலவரத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, டாடா ஸ்டீல்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் உச்சத்தில் உள்ளன. அதேவேளையில் சன் பார்மா, லூபில் போன்ற நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close