சமையல் காஸ் மானியம் முற்றிலும் ரத்து! அதிரவைக்கும் மத்திய அரசின் முடிவு! | The government has ordered oil companies to raise subsidised cooking gas

வெளியிடப்பட்ட நேரம்: 17:21 (31/07/2017)

கடைசி தொடர்பு:17:51 (31/07/2017)

சமையல் காஸ் மானியம் முற்றிலும் ரத்து! அதிரவைக்கும் மத்திய அரசின் முடிவு!

சமையலுக்காக பயன்படுத்தப்படும் காஸ் சிலிண்டரின் மானியத்தை முற்றிலும் ரத்து செய்ய மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. 

காஸ் சிலிண்டர்

சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியத்தை ஒரு மாதத்துக்கு 4 ரூபாய் வீதம் குறைத்து அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முழுவதும் நீக்க மத்திய அரசு, எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் மத்திய அரசு, எண்ணெய் நிறுவனங்களுக்கு, 'சமையல் காஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியத்தை மாதம்  2 ரூபாய் வீதம் குறைத்து வாருங்கள்' என்று உத்தரவிட்டது.

இந்நிலையில், இனி மாதம் 4 ரூபாய் வீதம் குறைக்கப்பட உள்ளது. இது குறித்த அறிவிப்பை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார். இப்போது, 14.2 கிலோ எடையுள்ள பன்னிரண்டு சமையல் காஸ் சிலிண்டர்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மானிய விலையில் ஒரு வருடத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது. 12-க்கு மேல் போனால், காஸ் சிலிண்டரை மானியம் இல்லாமல் 564 ரூபாய்க்கு வாங்க வேண்டி வரும்.  மத்திய அரசின் இந்த முடிவு சாமானிய மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.