வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (01/08/2017)

கடைசி தொடர்பு:13:45 (01/08/2017)

லஸ்கர் தீவிரவாத அமைப்பின் தலைவர் சுட்டுக் கொலை!

 லஷ்கர் தீவிரவாதி கொலை  - காஷ்மீர்

ம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில், இன்று காலை பாதுகாப்புப்படையினருடன் நடந்த மோதலில், லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவரான அபு துஜானா கொல்லப்பட்டார்.

புல்வாமா மாவட்டத்தின் ஹக்ரிபோரா என்ற கிராமத்தில், தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறையினருக்குக் கிடைத்தத் தகவலையடுத்து, எல்லைப் பாதுகாப்புப் படையினருடன் மாநில காவல்துறையினரும் இணைந்து, அந்தப் பகுதிக்குச் சென்று தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது, தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் அபு துஜானா என்ற தீவிரவாதியுடன் மற்றொரு தீவிரவாதியான ஆரிஃப் லில்ஹாரியும் கொல்லப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், இரு தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பியோடியதாகவும், அவர்களைத் தேடும்பணி தொடர்ந்து நடந்துவருவதாகவும் அவர் மேலும் கூறினார். காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண, ஒருபுறம் முயற்சிகள் நடந்தாலும் மோதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 

லஸ்கர் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் இரண்டுபேர் கொல்லப்பட்ட தகவல் அறிந்து, ஹக்ரிபோரா பகுதியில் சிறிதுநேரம் பதற்றம் ஏற்பட்டது. அந்தப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கலைக்க முயன்றபோது ஏற்பட்ட மோதலில், சிலர் காயம் அடைந்ததாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க