இந்தியச் சந்தையில் புதிய மைல்கல்லை எட்டிய அடிடாஸ் நிறுவனம்!

முன்னணி விளையாட்டுத்துறை பிராண்டுகளில் ஒன்றான ‘அடிடாஸ்’ நிறுவனம் இந்திய விளையாட்டுச் சந்தையில் புதியதொரு மைல்கல்லை எட்டியுள்ளது.

அடிடாஸ்

விளையாட்டுத்துறை தொடர்பான அனைத்துச் சாதனங்களும் விற்கும் முன்னணி பிராண்டட் நிறுவனம் அடிடாஸ். இந்நிறுவனத்தின் இந்தியப் பொறுப்பு மேலாளராக இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் நியமிக்கப்பட்டவர் தேவ் தாமஸ். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர், அடிடாஸ் நிறுவனத்தின் இந்தியச் சந்தைப் பொறுப்பை ஏற்ற பின்னர், அந்நிறுவனம் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிறுவனம் இந்திய விளையாட்டு சாதனங்கள் விற்பனைச் சந்தையில் 1000 கோடி ரூபாய் வருவாயைத் தாண்டிய முதல் நிறுவனம் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளது.

நிறுவனத்தில் வளர்ச்சி குறித்து தேவ் தாமஸ் குறிப்பிடுகையில், ‘அடிடாஸ் என்பது உலகளவில் மிகவும் பிரபலம் என்றபோதும், இந்தியச் சந்தைக்குத் தகுந்தபடி பல அதிரடி புதுமைகளைப் புகுத்திய பின்னரே எங்களால் காலூன்ற முடிந்தது. விளையாட்டு ஷூ, ஆடை, உபகரணங்கள் என எதுவானாலும் அதில் இந்திய ஸ்டைல் இருக்கும்படியும், கூடுதல் ட்ரெண்டிங் புதுமையையும் சேர்த்து வழங்கினோம்’ என வளர்ச்சிப் பாதை குறித்து விளக்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!