வெளியிடப்பட்ட நேரம்: 19:57 (01/08/2017)

கடைசி தொடர்பு:20:49 (01/08/2017)

சென்னை, முதியவர்களுக்குப் பாதுகாப்பான நகரம்... சர்வே ரிசல்ட்!

சென்னைக்குப் பல்வேறு சிறப்புகள் இருந்தாலும், அண்மையில் வெளியான ஓர் ஆய்வு முடிவு புதிய சிறப்பு ஒன்றைத் தெரிவிக்கிறது. முதியவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து எடுக்கப்பட்ட அந்த சர்வே முடிவில், தென் இந்தியாவில் குறிப்பாக `சென்னை' ஒப்பீட்டு அளவில் இந்திய மூத்த குடிகளுக்குப் பாதுகாப்பான நகரம் என்றுதான் சொல்லவேண்டியுள்ளது. ``இந்த சர்வே சென்னை மற்றும்சிவக்குமார் காஞ்சிபுரத்தில்  உள்ள 65 வயது முதல் 75 வயது உள்ளவர்களிடம் மட்டுமே எடுக்கப்பட்டது'' என சர்வே எடுத்த ஹெல்பேஜ் இந்தியாவின் மாநிலத் தலைவர் சிவக்குமார்  தெரிவித்தார். ``ஒப்பீட்டு அளவில் குறைவாக இருந்தாலும், தமிழகத்தில் மூத்த குடிமக்களுக்குப் பிரச்னை இல்லாமல் இல்லை'' என்றும் தெரிவித்தார் சிவக்குமார். அவர், முதியோர் தொடர்பான வேறு சில விவரங்களையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்...

``தமிழகத்தைப் பொறுத்தவரை முதியவர்களை 'வேண்டுமென்றே' தொலைத்துவிடுவதில், வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்களே முதன்மையாக இருக்கிறார்கள். 2000-ம் ஆண்டுக்குப் பிறகு கணவன் மட்டுமல்லாமல் மனைவியும் வேலைக்குச் செல்லும் வழக்கம் அதிக அளவில் அதிகரித்துள்ளது. இதனால் தனிமையை உணரும் முதியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பொருளாதாரத் தன்னிறைவு அடைந்த பெண்கள், முன்புபோல் குடும்ப விவகாரங்களில் மூத்தவர்களிடம் எந்தக் கருத்தும் கேட்பதில்லை. இதனால் தம்மைத் தள்ளிவைத்துவிட்டதாக அவர்கள் உணர்கிறார்கள். முக்கிய முடிவுகளில் கலந்தாலோசிப்பதில்லை என்பதில் தொடங்கி அவற்றை தம்மிடம் சொல்வதுகூட இல்லை என்பது வரை பல்வேறு கவலைகளுடன் இருக்கிறார்கள். இது, கடந்த பத்து ஆண்டுகளாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் காணக்கூடிய ஒன்றாக இருப்பது; கோயில்கள், கடற்கரை மற்றும் பூங்காக்களில் முதியவர்கள் சேர்ந்து பேசிக்கொண்டிருப்பது. இது, குடும்பத்தினர் அவர்களுடன் நேரம் செலவழிப்பதில்லை என்பதையே காட்டுகிறது. 

தமிழகம் முழுவதும் இலவச முதியோர் இல்லங்களைவிட, அதிக வசதியுடன்கூடிய கட்டண முதியோர் இல்லங்கள் அதிகரித்துள்ளன. இது நகர் பகுதியில் நான்கு மடங்கு கூடியுள்ளது. கிராமப்புறப் பகுதிகளில் பெற்றோரை முதியோர் இல்லத்தில் விடுவது என்பது இன்றளவும் மிக மிக அவமானகரமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. 

இந்த சர்வேயில் கேட்கப்பட்ட முக்கியமான கேள்விகள்...

1. ``முதியவர்களிடம் அவர்களின் வயது கருதி பொறுப்புடன் மற்றவர்கள் நடந்துகொள்கிறார்களா?''  (இந்தக் கேள்விக்கு மட்டும் சென்னைக்காரர்கள் கெட்டபெயர் வாங்கியுள்ளனர். முதியவர்கள் மெதுவாக நடக்கும்போதோ, சாலையைக் கடக்கும்போதோ அவர்களிடம் பொறுமையாக நடந்துகொள்வதில்லையாம் சென்னைவாசிகள். ) 

2.``பொது இடங்களில் மற்றவர்கள் கடுமையாக நடந்துகொள்ளும்போது, பதற்றமாகவும் உதவியற்றும் உணர்கிறீர்களா?''
(நாட்டின் மற்ற பகுதிகளைவிட தெற்கே குறிப்பாக சென்னையில் பாதுகாப்பாக உணர்வதாகத் தெரிவித்துள்ளனர்.) 


3. ``காய்கறி வியாபாரி உங்களிடம் எப்படி நடந்துகொள்கிறார்?" 


4. ``வங்கி ஊழியர்கள் உங்களிடம் எப்படி நடந்துகொள்கிறார்கள்?"  

 

சென்னையில் முதியவர்கள்

(நாட்டின் மற்ற பகுதிகளைவிட சென்னையில் வசிக்கும் முதியவர்கள் வங்கிக்குச் சென்றால் அவர்களிடம் சற்று கடுமையாகத்தான் நடந்துகொள்கிறார்கள் என்று சர்வே தெரிவிக்கிறது. உண்மையில், இதற்கு சோக ஸ்மைலி போட வேண்டும்.) 

இந்த சர்வேயில் மேலும் ஒரு செய்தி. மாநகரப் போக்குவரத்து நடத்துநர்கள் தங்களிடம் மரியாதையாக நடந்துகொள்வதில்லை என்று பெரும்பாலான முதியவர்கள் தெரிவித்துள்ளனர். நம் மாநகரப் போக்குவரத்துத் துறை நடத்துநர்களுக்கு இது தெரியாமலா இருக்கும்? எத்தனை எத்தனை சினிமாவில் சொல்லப்பட்ட செய்தி இது!
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்