Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வேளாண்மைப் பொருள்களை விற்பனைசெய்ய புதிய இணையதள வசதியைத் தொடங்கியது மத்திய அரசு

கிராமப்புற விவசாயிகள் தங்களுடைய வேளாண்மை பொருள்களை விற்பனை செய்வதற்கு உதவியாக இ-ராஷ்ட்ரிய கிஸான் அக்ரி மண்டி என்ற பெயரில் புதிய இணையதள வசதியை ஏற்படுத்தியிருக்கிறது மத்திய அரசு.

வேளாண்மை

இந்த இணையதளத்தில் விவசாயிகள் தங்களுடைய பெயரைப் பதிவு செய்துகொண்டு தங்களுடைய விளைபொருள்களை விற்பனை செய்யலாம். இதைப்போலவே, வேளாண் பொருள்களை வாங்குபவர்களும் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொண்டு தேவையான வேளாண் பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். 

‘இந்தத் தளத்தில் விவசாயிகள் பதிவு செய்து வேளாண் பொருள்களை விற்பனை செய்வதன் மூலம், சர்வதேச அளவில் விற்பனை வாய்ப்புகளைப் பெற வாய்ப்புள்ளது. ஆகையால், விவசாயிகள் அனைவரும் இந்தச் சேவையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என்று கேட்டுக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. மேலும், 'இந்தத் தளத்தில் விவசாயிகள், அரசுப் பொதுத்துறை நிறுவனங்கள், வேளாண் பொருள்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் இதர வேளாண் நிறுவனங்களையும் இந்த இணையதளத்தில் இணைக்கப்படுவார்கள்' என்றும் அறிவித்திருக்கிறது மத்திய அரசு. ஏற்கெனவே, விவசாயிகளுக்கு வங்கி அட்டையை வழங்கி வருகிறது மத்திய அரசு. 

கிராமப்புற விவசாயி எளிதாக இ-ராஷ்ட்ரிய கிஸான் அக்ரி மண்டி இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவித்திருந்தாலும், டான், ஜிஎஸ்டி போன்ற பதிவு எண்களைப் பெற்றிருந்தால் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்பதையும் கவனிக்க வேண்டும். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close