நோட்டாவுக்குத் தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம் அதிரடி | NOTA cannot be banned from upper house election

வெளியிடப்பட்ட நேரம்: 13:12 (03/08/2017)

கடைசி தொடர்பு:13:12 (03/08/2017)

நோட்டாவுக்குத் தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம் அதிரடி

மாநிலங்களவை தேர்தலில் 'நோட்டா'வுக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

high court

குஜராத் மாநிலத்தில் மாநிலங்களவை தேர்தல் வரவிருக்கும் சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் சிலர் பா.ஜ.க -வுக்குத் தாவினர். இதனால் அந்தக் கட்சி மீதம் இருக்கும் எம்.எல்.ஏ-க்களைத் தக்கவைக்கும் பொருட்டு அவர்களை கர்நாடகாவில் உள்ள இரு தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

குஜராத் மாநிலத்தில் நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலில் முதன்முதலாக நோட்டா அறிமுகப்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. 

மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களித்தால் அவரைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளபட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டாவுக்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவுப் பிறப்பித்தது. 

 பா.ஜ.க-வும் மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டாவுக்கு எதிரான நிலைப்பாட்டைத்தான் அறிவித்தது. தற்போது இந்த இருகட்சிகளின் கோரிக்கையும் மறுத்துவிட்டது.